சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 12065 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 166000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
