பட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களாக கட்சி தொடர்பான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய சம்பந்தமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதற்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இன்று (திங்கட்கிழமை) காலை, டாக்டர் செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கவனித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், டாக்டர் ராமதாசை அவரது மகனும் பா.ம.க தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல்நலம் குறித்தும் மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது நிலவும் நிலையில் தற்போது ராமதாசை அன்புமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.