தமிழக வெற்றி கழகத்தில் சமீபகாலமாக பல்வேறு கட்சியினர் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த பிறகு அவரது தலைமையில் பிற கட்சியில் இருப்பவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இன்னும் சில அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கூட தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் தற்போது அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

அதன்படி அமமுக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நாகு மற்றும் அவரது தலைமையிலான அமமுகவினர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். மேலும் நாளை ஈரோட்டில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அவர்கள் வருகை புரிந்து என் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகிறது முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.