தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் தனது ஆதரவு வேட்பாளர் அருளை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி உரிமை தொடர்பாக மோதல் நிலவி வரும் சூழலில், அன்புமணி அதிமுக கூட்டணியிலும், ராமதாஸ் சசிகலாவின் கட்சியுடன் இணைந்தும் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

இந்நிலையில், இன்று மேடையில் பேசி முடித்துவிட்டு கீழே இறங்கியபோது ராமதாஸிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் தொண்டர்கள் உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தேர்தல் பணிகளுக்கு இடையே ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.