தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மொத்தமாக 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் 25,79,676 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
