தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழகத்தில் மொத்தமாக எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வரும்.
இந்த நிலையில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மொத்தம் 40,04,694 பேர் இருந்த நிலையில் தற்போது 25,79,676 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதே போன்று சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 30,30,537 வாக்காளர்களில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 26,68,108 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இதில் எடப்பாடி பழனிச்சாமியின் எடப்பாடி தொகுதியில் மட்டும் 26,375 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
