சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில், முகப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் , சம்பவம் நிகழ்ந்த போது, 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்தோர் உடனடியாக நெருங்கிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரிவான மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என சந்தேகம் இருப்பதால், மீட்பு பணிகளில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து அரசு தரப்பில் விரைவில் முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
