பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர்கள் வரவேற்றனர்.