தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1937க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று முதல் ரூ.8 உயர்ந்து ரூ. 1,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வணிகர்களுக்கு மேலும் சுமையாக அமைந்துள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ. 1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.