கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது இருவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் இதர காவலர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பல்வேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும், சாட்சியங்களும் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
அதன்படி உயிரிழந்த தந்தை மகன் உடம்பில் பலத்த காயங்கள் இருந்த நிலையில் போலீசார் அடித்து பழகுவதற்கு ஆட்கள் கிடைத்துள்ளதால் கொடூரமாக அடித்தது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை மூலம் நிரூபனமானது. இதன் காரணமாக 9 போலீசாரையும் நீதிமன்றம் குற்றவாளிகள் என கருதிய நிலையில் இன்று தண்டனை விவரங்கள் வெளியாக இருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே குற்றத்தில் ஈடுபட்டதால் சாதாரண நபர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஆயுள் தண்டனை வழங்கினால் கண்டிப்பாக பயம் இருக்காது எனவே மரண தண்டனை வழங்குவது தான் சரி என்று காட்டமாக கருத்து தெரிவித்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது 9 போலீசாருக்கும் மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையோடு 15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கூடுதலாக கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
