தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சொத்து விபரங்கள் குறித்து வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார். அதன்படி அவருக்கு மொத்தம் 520 கோடி சொத்து இருக்கும் நிலையில் ரூ.404.58 கோடி அசையா சொத்துக்களும், ரூ.115.13 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பு மட்டுமே சுமார் 7.52 கோடி ஆகும். அவரது வங்கி கணக்குகளில் 278 கோடி பணமும், 110 சவரன் தங்க நகைகளும், ஒரு கோடி மதிப்பிலான வைர நகைகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரிடம் ஐந்து சொகுசு கார்கள் இருக்கும் நிலையில், நீலாங்கரை, சோளிங்கர் மற்றும் சாலிகிராமம் ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருமணம் ஆக 25 வருஷங்களில் அவர் தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் எந்தவிதமான சொத்துக்களும் வாங்காத நிலையில் தன்னுடைய பெயரில் மட்டுமே அனைத்து சொத்துக்களையும் வாங்கியுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் விஜயிடம் 1.20 கோடி மதிப்பில் தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவரது மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. மேலும் நடிகர் விஜய்யின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் தற்போது தன்னுடைய மனைவியின் சொத்து விவரங்களையும் அவர் வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
