சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,520 ரூபாய்க்கும் ஒரு கிராம் 14,940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16298 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,384 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.