சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி இருந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9981 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 126000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
