திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தடுப்பதற்காக சென்ற உதவி காவல் ஆய்வாளரை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தான். இதன் காரணமாக உதவி காவல் ஆய்வாளர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
