பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் நடிகருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு, தனது 102-வது வயதில் காலமானார்.

முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானார். அவரது உடல் தஞ்சாவூர் மாவட்டம், புது காரியாபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சினேகன் தனது இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது, அவர்களைத் தந்தை சிவசங்குவிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்ற நெகிழ்ச்சியான காணொலியை அண்மையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். தந்தையின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திரைத்துறையினர் மற்றும் பல பிரபலங்கள், கவிஞர் சினேகனுக்குத் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் ஆறுதல் தெரிவித்து, சிவசங்குவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.