நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ரவி சில கருத்து வேறுபாடுகள் காரணமாகத் திட்டத்திலிருந்து விலகிய நிலையில், இயக்கப் பொறுப்பை நடிகர் விஷாலே ஏற்றுக்கொண்டு பணியைத் தொடர்ந்தார். இந்தச் சூழலில், இயக்குநர் சங்கம் மற்றும் FEFSI அமைப்பு ஆகியவை இணைந்து ‘மகுடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளன.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுவது, நடிகர் விஷால் முறையான ‘தடையில்லாச் சான்றிதழ்’ (NOC – No Objection Certificate) பெறாமல் தானே படத்தை இயக்கத் தொடங்கியதே ஆகும். ஒரு படத்தின் இயக்குநர் விலகும்போது, தயாரிப்பாளர் அல்லது நடிகர் அந்தப் பொறுப்பை ஏற்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட மற்றும் சங்க விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ‘மகுடம்’ திரைப்படத்தின் அடுத்தகட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
