பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் மரணம் தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, சுஷாந்தின் மரணம் குறித்து அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளை தற்போது முன்வைத்துள்ளார். சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல என்றும், இரண்டு நபர்கள் சேர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, சுஷாந்த் சிங் தூக்குப்போட்டுக்கொண்டதாகக் கூறப்பட்ட இடம் குறித்து அவர் ஒரு வித்தியாசமான தகவலை வெளியிட்டுள்ளார். சுஷாந்தின் படுக்கைக்கும், தூக்கு மாட்ட பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஃபேனுக்கும் இடையே உள்ள தூரத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர் தானாகத் தூக்குப் போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று ஸ்வேதா சிங் கூறியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணையில் ஒரு புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளது.
