தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களையும் நிலைகுலையச் செய்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர பலத்துடன் மாநிலம் முழுவதும் எழுச்சி பெற்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவிநாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கமலி வெற்றி பெற்றார். அதன் பிறகு நாமக்கல் ராசிபுரம் தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஈரோடு மேற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஆனந்த் மோகன் வெற்றி பெற்றுள்ளார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யா வெற்றி வாகை சூடியுள்ளார்.
