தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே கடும் போட்டிகள் நிலவிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் சில இடங்களை கைப்பற்றி வரும் நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தகுதியையும் கைப்பற்றியுள்ளது. மேலும் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் மற்ற கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.