தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கரூரில் கூட்ட நெரிசலில் போது பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி செல்ல வந்த ஆம்புலன்ஸை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது அந்த கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.