தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையின் தாக்கம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 22) அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகவே இடியுடன் கூடிய மழை வீழ்ச்சியாக பதிவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் பள்ளி விடுமுறை குறித்து கலெக்டர்கள் மற்றும் கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. எனவே, மாவட்ட வாரியாக நாளை விடுமுறை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
