வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்படுகின்றன என்பதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் உற்பத்தி பாதுகாக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள் மழையினால் பாதிக்கப்படாமல் நடைபெறவேண்டும் என்பதை உறுதி செய்ய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, பருவமழை காலத்தில் நெல் கொள்முதல் மையங்களில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து, கொள்முதல் பணிகளை தாமதமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், விவசாயிகள் எந்தவொரு தொல்லையும் எதிர்கொள்ளாமல் நெல் வழங்கும் நிலையை உறுதி செய்யவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், மழையால் நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்
