
தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதாவது தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை வெளுத்து வாங்கும் நிலையில் நாளை மறுநாள் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் வருகிற 18-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக நாளை திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் என இரண்டுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.