தமிழ் திரையுலக பிரபலம் டிசைனிங் ஜாம்பவான் குமார் தற்போது காலமானார். இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். டிசைனிங் ஜாம்பவான் குமாருக்கு 67 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார்.

இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான சலங்கை ஒலி படத்தில் தொடங்கி சபாஷ் நாயுடு வரை தொடர்ச்சியாக கமலுடன் பணியாற்றியுள்ளார். இவர் தேவர் மகன், தளபதி, விருமாண்டி, படையப்பா, கில்லி மற்றும் வல்லவன் உட்பட பல ஐகானிக் பட போஸ்டர்கள் இவரது கைவண்ணத்தில் வெளிவந்தவை. மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.