இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர்.
அதில் 574 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் இந்திய வீரர்கள் 366 பேர். வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியால் ₹8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்வியை, தற்போது ₹95 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் வாங்கியுள்ளது.
