தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெற்றது. அந்த மாநாடு நடத்த இடம் கொடுத்த  விவசாயிகளுக்கு நடிகர் விஜய் சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து விருந்து கொடுத்தார். அதோடு அவர்களுக்கு தாம்பூல தட்டில் வேஷ்டி சேலை போன்ற பரிசு பொருட்களையும் வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆசைப்பட்டதற்கு ஏற்ப அவர்களுடன் செல்பி கூட எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் நடிகர் விஜயை பூரித்து பேசியுள்ள வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் மாநாடு நடத்த இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தை கொடுத்ததோடு மட்டுமின்றி அவர்களுக்கு விருந்தும் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளதோடு அங்கு நடப்பட்ட ஒரு 100 அடி நிரந்தரக் கொடி கம்பத்தில் 500 மீட்டர் சுற்றளவிற்கு மின்னல் தாக்காதவாறு சிறப்பு வசதிகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாயி ஒருவர் இது பற்றி கூறும்போது இதுவரை எந்த ஒரு கட்சியும் இப்படி மாநாடு நடத்த இடம் கொடுத்ததற்கு காசு கொடுத்தது கிடையாது. உதயநிதி ஸ்டாலின் காரை விட்டு கூட இறங்கவில்லை. எங்கள் ஊர் எம்எல்ஏ கூட எங்களை மதிக்கவில்லை. ஆனால் விஜய் மாநாடு நடத்த இடம் கொடுத்தது மட்டுமின்றி பூமி பூஜை நடைபெறும் போது கூட விருந்து கொடுத்தார். அதன் பிறகு பணம் கொடுத்ததோடு மட்டுமின்றி எங்களை அழைத்து மரியாதையோடு நடத்தியது மட்டுமின்றி விருந்தும் கொடுத்து உபசரித்தார். திமுக கூட இதுவரை ஒரு ரூபாய் இடம் கொடுத்ததற்காக தரவில்லை. மேலும் உதயநிதி ஸ்டாலின் எங்களை மதிக்கக்கூட இல்லை என்றும் விஜய் கொடுத்ததற்கு காசு கொடுத்ததோடு மரியாதையும் கொடுத்துள்ளார் என்றும் அந்த விவசாயி பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.