சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வரும் நிலையில் இன்று சற்று நிம்மதியாக காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் குறைந்தது. ஆனால் தற்போது அதிர்ச்சியாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு 720 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 80480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 10060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 140 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 140000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.