சென்னை வேளச்சேரி அருகே ஏரியில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கணவருக்கு தெரியாமல் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்ததாகவும், தவறான உறவில் பிறந்த குழந்தை என்பதால், ஏரியில் வீசி கொன்றதாகவும் குழந்தையின் தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.