கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் தற்போது மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் குறித்து காவல்துறை மிக தீவிரமாகவும், அதேசமயம் அதிவேகமாகவும் விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் துளியும் தாமதம் காட்டாமல், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை (Charge Sheet) உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு முதல்வர் விஜய் மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிறுமியின் பிரேத பரிசோதனை முடிந்து உடல் சொந்த ஊரான சேலத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையில், முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையை விரைவாகப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.