ஈரான் நாட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ராணுவ தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் தலைநகரில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி, அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டனர். அதோடு ராணுவ தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் கொல்லப்படும் நிலையில் அந்த நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்க நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஈரான் நாட்டின் புதிய இடைக்கால உச்ச தலைவராக அயதோலா அலிரேசா அராஃபி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஈரா நாட்டை வழிநடத்த இவரது தலைமையில் 3 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
