தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே கடுமையான போட்டி நிலவு நிலையில் தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சுயேச்சை ஆதரவு வேட்பாளர் முன்னிலை வகித்த நிலையில் தற்போது களம் மாறி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வாகை சூடியுள்ளது அதிமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.