தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான ஒட்டன்சத்திரத்தில் ஆளும் திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான அர.சக்கரபாணி அமோக வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த அவர், இறுதி நிலவரப்படி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் எஸ்.மோகன் மற்றும் பாஜக வேட்பாளர் விடியல் எஸ்.சேகர் ஆகியோரை விடக் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியைத் தன்வசமாக்கினார்.
இந்த வெற்றியின் மூலம் 1996 முதல் 2026 வரை தொடர்ந்து 7-வது முறையாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் வெற்றி பெற்று அர.சக்கரபாணி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அமைச்சரின் இந்தத் தொடர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கூடி, இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வெற்றி திமுக முகாமிற்குத் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது.
