நெல்லை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான தேர்தல் போட்டியில், அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை வகித்து வந்த அவர், ஒவ்வொரு சுற்றிலும் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தினார்.
திமுக கூட்டணி மற்றும் தவெக வேட்பாளர்களின் கடும் போட்டியை முறியடித்து, தனது கோட்டையை மீண்டும் ஒருமுறை இசக்கி சுப்பையா தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தொகுதி மக்களிடையே அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கும், அதிமுகவின் வாக்கு வங்கியும் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த வெற்றிக் செய்தியைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி முழுவதும் அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை கோஷங்களுடன் பட்டாசு வெடித்து திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.
