கடந்த சில வாரங்களாகவே திமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அவர் திமுகவில் முறைப்படி இணைய உள்ளதாகத் தெரிகிறது. ஓபிஎஸ்-ஸுடன் சேர்ந்து அவரது தீவிர ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பனும் தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளார்.
News Tamil Breaking || MLA பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்.?#MKstalin #OPS #OPanneerselvam #Iyyappan #DMK #Newstamil24x7 pic.twitter.com/mEn634xblY
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) February 27, 2026
“>
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக இந்த ‘மூவ்’ எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுக-வில் மீண்டும் இணைவதற்கான அனைத்து கதவுகளும் எடப்பாடி பழனிசாமி தரப்பால் மூடப்பட்ட நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க ஓபிஎஸ் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
