பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். நேற்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. பாமக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிக்க உள்ள ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.