தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று முறை டெட் தேர்வு நடத்த தற்போது பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2026 இல் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு ஆசிரியர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது வருடத்திற்கு மூன்று முறை தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.