இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப் மற்றும் சேஸின் சிறப்பான தொடக்கத்தால் 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில், ஆரம்பகட்ட விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

இருப்பினும், ஒருபுறம் நங்கூரம் பாய்ச்சி நின்ற சஞ்சு சாம்சன், 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இவருடன் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இந்தியா அரையிறுதியில் மோத உள்ளது.