தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்..

அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை கம்பம் நகர் பகுதியில் நடமாடும் நிலையில் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  100க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ள சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.. அதோடு இந்த அரிக்கொம்பன் யானை முகாமிட்டிருக்கும் பகுதியில் இருந்து ஊர் பகுதிக்குள் செல்லாத வண்ணம் பெரிய டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் உட்பட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு சந்துகளுக்கும் நிறுத்தி பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 பேரை பலி கொண்ட அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைத்து அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே  மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமுளி லோயர் கேம்ப் பகுதியில் இருந்து காலையில் கம்பம் நகரில் அரிக்கொம்பன் நுழைந்த நிலையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.