தமிழக அரசு கலப்படமான உணவுகள் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து பொதுமக்கள் எளிமையான முறையில் புகார் அளிக்க ஒரு புதிய செயலி மற்றும் வெப்சைட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஹோட்டல், பேக்கரி, கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவைகளில் பொதுமக்களுக்கு தரமற்ற உணவு கிடைத்தால் உடனடியாக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலியில் புகார் கொடுக்கலாம்.

அந்த புகார்கள் மீது உரிய முறையில் விசாரிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய செயலியில் புகார்களை டைப் செய்யாமல் எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இருக்கிறது. மேலும் பொதுமக்கள் புகார் கொடுக்க வேண்டிய புதிய வெப்சைட் foodsafety.tn.gov.in ஆகும். அதோடு Tn food Safety customer App என்ற செயலியையும் போனில் பதிவிறக்கம் செய்து புகார் கொடுக்கலாம்.