பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவருக்கும் இடையே சுமூகத் தீர்வு எட்டாததால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் அன்புமணியின் பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று மாலை 5.30 மணிக்குள் ராமதாஸ் அன்புமணி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இருவரிடமும் தனியாக பேச வேண்டும் எனவும், அப்போது கட்சிகாரர்கள் யாரும் உடன் இருக்கக் கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு அன்புமணி தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.