திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு பேர், குடிபோதையில் ரகளை செய்ததாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை , இருவரும் கூரிய ஆயுதம் கொண்டு விரட்டி விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தலையை துண்டிக்கும் அளவிற்கு வாளால் தாக்கப்பட்டSI சண்முகவேல்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம்  மாவட்ட காவல் துறையிலும் பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.