திருச்சியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி. இவர் நாளை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கும் நிலையில் தற்போது அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிலையில் ஏற்கனவே அதிமுக கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என பலரும் தொடர்ந்து விலகி வரும் நிலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாக வந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ள நிலையில் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் உற்சாகமாகவும் எழுச்சியாகவும் இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.