தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது எனவும் மிரட்டியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் திமுக புள்ளிகள் மூன்று பேர் கைதாக உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கூறிய நிலையில் தற்போது இந்த சம்பவம் கூடுதல் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் மிகவும் ஆவேசமாக கூறினார். அவர் பேசியதாவது, கடந்த 40 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கும் நிலையில் 10 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியும் ஸ்டாலினும் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கரூர் கம்பெனி மற்றும் கரூர் கேங் தான் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தினர் ஒரு ஓட்டிற்கு 2000 ரூபாயும் தேர்தலுக்காக 70 கோடி ரூபாயும் செலவழித்து வெற்றி பெறவில்லை. இப்படி குதிரை பேரத்தில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா. மிகவும் கேவலமாக எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக நினைத்துதான் ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
உதயநிதி உத்தரவின் பெயரில் தான் எங்க எம்எல்ஏக்களிடம் பேரம் நடப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதனை சந்திக்க தமிழக வெற்றி கழகம் தயாராக இருக்கிறது. ஒரு சில எம்எல்ஏக்கள் மிரட்டப்படும் நிலையில் அதில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் என்பவர் தொடர்ந்து செந்தில் பாலாஜியுடன் தொடர்பில் இருக்கும் நிலையில் பேரம் பேசியவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தமிழக வெற்றி கழகம் யாரிடமும் பேரம் பேசவில்லை இந்த எம்எல்ஏக்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. மேலும் ஆளுநருக்கு கடிதம் எழுதிய ஆர் எஸ் பாரதியிடம் குதிரை பேர குற்றச்சாட்டு ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
