தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் மாற்று கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் பாமக மற்றும் அதிமுக பாலமாக இருக்கும் தர்மபுரி நல்லம்பள்ளி ஒன்றியத்திலிருந்து புதிதாக 500 பேரை திமுகவில் இணைத்துள்ளனர். கடந்த தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் கோட்டை விட்டதால் இந்த முறை திமுகவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 300 பேர் திமுக இணைந்த நிலையில் தற்போது மீண்டும் 500 பேர் இணைந்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.