தமிழக அரசியல் களம் தினந்தோறும் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது இபிஎஸ் கூடாரத்திற்குப் பேரிடியாக இறங்கியுள்ளது.

“அதிமுகவில் தற்போது நடந்து வரும் அடுத்தடுத்த விகாரமான நிகழ்வுகள் என் மனதிற்குப் பெரும் வேதனையையும், கடுமையான விரக்தியையும் உண்டாக்கி விட்டது” என்று தெரிவித்துள்ள செம்மலை, தனது விலகல் முடிவை ஓப்பனாக அறிவித்துள்ளார்; நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு கட்சிக்குள் நிலவும் உள்கட்சிப் பூசலால் மனமுடைந்து ஒரு சீனியர் தலைவர் இப்படி கட்சியை விட்டே செல்வது  எடப்பாடி பழனிசாமி தரப்பை நிலைகுலைய வைத்துள்ளது.