தஞ்சாவூரில் நடைபெறும் திருமண விழா ஒன்றில் திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது திமுக தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை ஒருபோதும் தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவுக்கு வராது. எனவே திமுகவினர் யாரும் சோகமாக இருக்க தேவை இல்லை. தமிழ்நாட்டில் திமுக திட்டங்கள் இருக்கும் வரை திமுக ஆட்சி தான். எந்த பணியும் செய்யாமல் தமிழக வெற்றிக்கழகம்  ஆட்சிக்கு வந்துவிட்டது. மேலும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டும்தான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுகளோடு ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது