தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க வருமாறு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று விஜய் உரிமை கோரியிருந்த நிலையில், தற்போது ஆளுநரிடமிருந்து இந்த அதிகாரப்பூர்வ அழைப்பு கடிதம் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது நூறு சதவீதம் உறுதியாகியுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் மற்றும் விசிக-வின் வன்னி அரசு உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில், ஆளுநரின் இந்த அழைப்பு தவெக தொண்டர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் புதிய அரசியல் பயணம் நாளை காலை 10 மணி முதல் முறைப்படி தொடங்கவுள்ளது.