தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் “இழுபறி” க்ளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்துள்ள அதிரடி பேட்டி ஒட்டுமொத்த கோட்டையையும் அதிரவைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் 108 இடங்களைப் பிடித்தும், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கிடைத்தும் 113 என்ற எண்ணிக்கையில் நிற்க, அந்த “மேஜிக் நம்பரான” 118-ஐ எட்ட முடியாமல் தவித்து வரும் சூழலில் ஆளுநர் பந்தை கட்சிகளின் பக்கமே திருப்பியுள்ளார். “என்கிட்ட வர்றவங்ககிட்ட நான் கேட்குறது ஒண்ணுதான், உங்ககிட்ட போதிய எண்ணிக்கை இருக்கா? அப்படி எண்ணிக்கையை நீங்க இன்னைக்குக் கொண்டு வந்தா, நாளைக்கே உங்களை நான் முதலமைச்சரா பதவியேற்க வைப்பேன்!” என ஆளுநர் ஓப்பனாக ‘டெட்லைன்’ வைத்துள்ளார்.
இதில் உச்சகட்ட ட்விஸ்ட்டாக, பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்த்து வந்து மெஜாரிட்டியை காட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “யார் வந்தாலும் நம்பர் இருக்கான்னு பார்ப்பேன், நான் யாரையும் தடுக்கவில்லை” என அவர் ‘க்ரீன் சிக்னல்’ கொடுத்திருப்பது தவெக கூடாரத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
“விஜய்யை நான் ஓரங்கட்டவில்லை, ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்ற ரீதியில் ஆளுநர் பேசியிருப்பது, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடிக்கப்போவதைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
