தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா. இவர் 2018 ஆம் ஆண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூறாக பதிவிட்டார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எச். ராஜாவை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

அவருக்கு இந்த இரு வேறு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதக்காலம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த இரு வேறு வழக்குகளிலும் அவருக்கு 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் எச் ராஜா வழக்கு தொடர்ந்த நிலையில் அவருடைய மனதை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சமூக வலைதள பதிவுகளின் அடிப்படையில் அவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் எச் ராஜா மீது ஈரோடு நகர காவல் துறை, கருங்கல்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.