தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கியுள்ளார். மேலும் அந்த வகையில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.